கள்ளக்குறிச்சி விவகாரம் : அரசு நிர்வாகத்தின் அலட்சியம்! விஜய் தாக்கு!

கள்ளக்குறிச்சி விவகாரம் : அரசு நிர்வாகத்தின் அலட்சியம்! விஜய் தாக்கு!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியம் வெளியே தெரிந்துள்ளது என நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியம் வெளியே தெரிந்துள்ளது என நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் அலட்சியம் என்று அவர் கூறியிருப்பதால் இந்த அறிக்கை காட்டுத்தீயாக பரவி வருகிறது. பல்வேறு கட்சித் தலைவர்களும் இதுகுறித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற அதிர்ச்சிகர சம்பவங்கள் நிகழாத வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களுடன் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story