காஞ்சிபுரம் அருகே மது போதையில் தகராறு செய்த தம்பியை அடித்து கொன்ற அண்ணன்

காஞ்சிபுரம் அருகே மது போதையில் தகராறு செய்த  தம்பியை அடித்து கொன்ற அண்ணன்
X

கொலை செய்யப்பட்ட  ஆட்டோ ஓட்டுநர் நேதாஜி.

காஞ்சிபுரம் அருகே மது போதையில் தகராறு செய்த தம்பியை அடித்து கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த வேடல் பகுதியில் அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணன் தாக்கியதில் தம்பி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தை சேர்ந்த வேடர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி இவர் ஆட்டோ ஓட்டுனர். தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

இவருடைய தம்பி நேதாஜி தாய் தந்தையர் இல்லாததால் இவர்களுடனே தங்கி இருந்து ஆட்டோ ஓட்டி வந்த நிலையில் அவ்வப்போது மது போதையில் வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருடைய சொத்து ஒன்று விற்பனை செய்த நிலையில் மீண்டும் தகராறு அவ்வப்போது எழுந்து வந்துள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு 7 மணி அளவில் நேதாஜி அதிக மது போதையில் பாரதியுடன் தகராறு ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் பாரதி தனது தம்பியை சரமாரியாக தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயத்தினால் அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

இதுகுறித்து பாரதி தன் தம்பி வீட்டில் ரத்த வெள்ளத்தில் இருந்து கிடப்பதாக மாகரல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பாரதி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு காவல்துறையிடம் சரண் அடைந்தார். இந்நிலையில் இது குறித்த வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்