உத்திரமேரூர் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரை இறக்கப்பட்ட ஹெலிகாப்டர்

உத்திரமேரூர் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரை இறக்கப்பட்ட ஹெலிகாப்டர்
X

உத்திரமேரூர் அருகே  தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரை இறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.

உத்திரமேரூர் அருகே தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானப்படை ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது.

உத்திரமேரூர் அருகே ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ஊழியர்கள் வேறு ஹெலிகாப்டரில் வந்து சரி செய்து எடுத்துச் சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடமச்சி கிராமத்தில் தாம்பரம் விமான நிலையத்தில் இருந்து வந்த பயிற்சி ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை 11 மணியளவில் தரை இறக்கப்பட்டது.இதில், கேப்டன் சஞ்சீவ்,நீரஜ் ஆகிய இருவர் ஹெலிகாப்டரில் பயிற்சிக்காக வந்து உள்ளனர்.


இந்த நிலையில் ஹெலிகாப்டர் பழுது அடைந்தது குறித்து தாம்பரம் விமானப்படைக்கு தகவல் தெரியப்பட்டது.அதைத்தொடர்ந்து, ஹெலிகாப்டரை சரி செய்ய மற்றொரு ஹெலிகாப்டரில் ஐந்து பேர் கொண்ட குழு வந்து பழுது அடைந்த ஹெலிகாப்டரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுனர்.

இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் ஹெலிகாப்டர் அருகே வந்து ஆச்சரியத்துடன் பார்த்து செல்பி எடுப்பது வருகின்றனர். இப்பகுதியில் சாலவாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பழுது பார்க்கும் பணி நடைபெற்று அதனைத் தொடர்ந்து பழுது நீக்கப்பட்டு மீண்டும் செயல் முயற்சி எடுக்கப்பட்டு அதன் பின் முழு அளவில் சீர் செய்யப்பட்ட நிலையில் பழுது நீக்கப்பட்டு 1.30 மணியளவில் 2 ஹெலிகாப்டர்களும் தனது இருப்பிடத்திற்கு கிளம்பியது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே போல் சாலவாக்கம் அடுத்த திருவந்திரம் பகுதியில் இதே போன்ற பயிற்சி ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பத்திரமாக தரையிறக்கப்பட்டு மீண்டும் சரி செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டு குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்பகுதியில் ஹெலிகாப்டர் திடீரென தரை இறக்கப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!