ஜமாபந்தி நடத்தியும் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் அதிர்ச்சி

ஜமாபந்தி நடத்தியும் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் அதிர்ச்சி

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க குவிந்த மக்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி கடந்த ஐந்து தினங்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு அளிக்க வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 597 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி அளித்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வண்டியும், படை வீரர் கொடி நாள் நிதி வசூலில் இலக்கு எய்திய அரசு அலுவலர்களுக்கு பதக்கங்களும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிகள் , அதன்பின் தொடர் விடுமுறை என பல வகைகளில் திங்கட்கிழமைகளில் விடுமுறை வந்ததால் இந்த திங்கட்கிழமையில் மனு அளிக்க ஏராளமான வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் அதை அளிக்க உடன் வந்தோர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வளாகத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஐந்து தினங்களாக வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில் அங்கு தங்கள் வருவாய்த்துறை குறித்த புகார்களை அளித்தும் , இன்று இவ்வளவு பொதுமக்கள் தங்கள் மனுக்களை எடுத்து வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story