கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : 3வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை..!

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : 3வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை..!

குளச்சல் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வைத்திருப்பதை படத்தில் காணலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடன் சீச்சம் அதிகரித்து காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் இயல்பை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் வரும் 7-ம் தேதி இன்று வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடையால் குளச்சல் பகுதி மீனவர்கள் மூன்றாவது நாள் ஆக மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்களது பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் கடலின் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும் காற்றின் வேகம் 35-கி.மீ முதல் 45-கி.மீ வரைக்கும் சில நேரங்களில் 55-கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஞாயிற்றுகிழமை முதல் 7-ம் தேதி வரை ஆன இன்று வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லவும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மூன்றாவது நாள் ஆக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் 7-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story