கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளை ஆதிதிராவிடர் நலத்துறையின் இணைக்க எதிர்ப்பு

கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளை ஆதிதிராவிடர் நலத்துறையின் இணைக்க எதிர்ப்பு

உசிலம்பட்டியில் பார்வட் ப்ளாக் கட்சியினர் ஒன்றிணைந்து அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பார்வட் ப்ளாக் கட்சியினர் ஒன்றிணைந்து அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளர் சீரமைப்புத்துறை, ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்க ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தாக்கல் செய்த அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, உசிலம்பட்டியில் பார்வட் ப்ளாக் கட்சியினர் ஒன்றிணைந்து அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் கள்ளர் சீரமைப்புத்துறை மற்றும் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கைகள் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு ஆய்வறிக்கையை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார்.

இந்நிலையில், இன்று மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு கள்ளர் மற்றும் ஆதிதிராவிட பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் சந்துருவின் அறிக்கைக்கு எதிராகவும், அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும், அகில இந்திய பார்வட் ப்ளாக், பாரதிய பார்வட் ப்ளாக், தென்னிந்திய பார்வட் ப்ளாக், தமிழ் தேசிய பார்வட் ப்ளாக், நேதாஜி சேனை, மருது சேனை, அனைத்து கள்ளர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பார்வட் ப்ளாக் அமைப்பினர் ஒன்றிணைந்து சந்துருவின் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு இருந்து ஊர்வலமாக தேவர் சிலை வரை வந்து கண்டன கோசங்களை எழுப்பியவாறு அறிக்கையின் நகல்களை எரிந்தனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமை யிலான போலீசார், எரிக்கப்பட்ட அறிக்கையின் நகல்களை தண்ணீர் ஊற்றி அணைத்தனர், அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது.

Tags

Next Story