புயல் எச்சரிக்கை எதிரொலி: நான்காவது நாளாக கடலுக்குள் செல்லாத வேதாரண்யம் மீனவர்கள்

புயல் எச்சரிக்கை எதிரொலி: நான்காவது நாளாக கடலுக்குள் செல்லாத வேதாரண்யம் மீனவர்கள்
X

புயல் எச்சரிக்கை காரணமாக வேதாரண்யத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்

புயல் கரையை கடக்கும்போது கடல் அலைகள் சீற்றமாக காணப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக உருவாகும். எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து, நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுக்காட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் 1,500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், புயல் கரையை கடக்கும்போது கடல் அலைகள் சீற்றமாக காணப்படும். அப்போது படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடையாமல் இருப்பதற்ககாக கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை டிராக்டர் மூலம் தொலைவில் பாதுகாப்பாக இழுத்து வைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மீன்பிடிவலைகள், உபகரணங்களையும் பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்