மின்கட்டண உயர்வை எதிர்த்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை எதிர்த்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்தியும், ரேசன் கடையில் வழங்கப்படும் பருப்பு, பாமாயிலை நிறுத்த முயற்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்து, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்பாட்டம் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எ.எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பங்கேற்று ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார். சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, பவானி சாலை ஆகிய மூன்று சாலைகளிலும் அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் நிரம்பியிருந்தனர்.


முன்னாள் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இந்த தி.மு.க. அரசு தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தி வந்து கொண்டுள்ளது. இதனை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்படி, நாமக்கல் மாவட்ட அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதம் ஒருமுறை மின் கட்டணம் என்றார்கள். கொரானா காலம் என்பதால் மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று சொன்னார்கள். கொரானா முடிந்தவுடன் மின் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தினார்கள். வருடம் 6 சதவீதம் என்று உயர்த்திக்கொண்டு உள்ளனர். இதனால் 20 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. வருடா வருடம் நிதி நிலை அறிக்கையில் மின்சார வாரியம் நஷ்டத்தில் இருப்பதால், 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். மானியமாக 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். கிட்டத்திட்ட 42 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது.

2021ல் நாங்கள் ஆட்சியை விட்டு வரும் போது, 12 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருந்தது. இப்போது மீண்டும் 10 ஆயிரம் கோடி நஷ்டம் என்கிறார்கள். இது குறித்து சட்டமன்றத்தில் கூட நான் கேட்டேன். பதில் இல்லை. நாடாளுமன்ற தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரிசாக மின் கட்டணம் உயர்த்தி உள்ளார்கள். தி.மு.க.வினர் பொய்யாக ஒரு தகவலை பரப்பி வருகிறார்கள். உதய் திட்டத்தில் அ.தி.மு.க.வினர் கையெழுத்து போட்டதால்தான் மின் கட்டணம் உயர்ந்து உள்ளது என கூறி வருகிறார்கள். கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் கூட இதே புகாரை கூறி வருகிறார். அந்த கட்சி ஆட்சி செய்யும் கேரளாவில் கூட இந்த திட்டத்தில் கையெழுத்து போட்டு உள்ளார்கள். ஜெயலலிதா வசம் இது பற்றி மத்திய மின்துறை அமைச்சர் கையொப்பம் கேட்ட போது, இரண்டு நிபந்தனைகள் வைத்தார்கள். விவசாயத்திற்கு மின் மீட்டர் வைக்க கூடாது, மூன்று மாதம் ஒருமுறை மின் கட்டணம் மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறினார்.

இதனை நீக்கிய பின்தான் 2017, ஜன. 8ல் கையொப்பம் போட்டேன். நான்கு ஆண்டு காலம் எங்கள் ஆட்சி இருந்தது. நான்கு ஆண்டு காலம் மின் கட்டணம் உயரவில்லை. அப்படி ஒரு சட்டம் இருந்து இருந்தால், நாங்கள் மின் கட்டணம் ஏற்றாமல் இருந்தால் அவர்கள் ஏற்றுக்கொண்டு இருப்பார்களா? ஆட்சியை சரியாக நடத்த முடியாமல் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார்கள். யார், எந்த இடத்தில் கூப்பிட்டு கேட்டாலும் நாம் பதில் சொல்ல தயார்.

மத்திய அரசு மீது குறை சொல்லி, மக்களுக்கு எதிராக மின் கட்டணம் உயர்த்தி வருகிறார்கள். இனி பொய்யான பிரச்சாரம் செய்யாமல் இருக்க வேண்டும். இலவச வேட்டி, சேலை நாங்கள் இருக்கும் போது, ஜூன் மாதம் ஆர்டர் கொடுத்து விடுவோம், ஆனால் இவர்கள் தாமதமாக ஆர்டர் கொடுப்பதால் சரிவர கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மது பானங்கள் ஆன் லைனில் ஆர்டர் செய்தால், டெலிவரி செய்ய வரும் போது, வீட்டில் பெண்கள் இருந்தால், கலாச்சாரம் வீணாகும். இதனை தடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கூறினேன். ஆனால் அவர்கள் இன்னும் சொல்லிக்கொண்டு உள்ளார்கள். வந்தாலும் வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story