குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த  இருவர் கைது
X
குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

குமாரபாளையம் அங்காளம்மன் கோயில் பகுதி மற்றும் ஆனங்கூர் சாலை பரமகவுண்டர் நகர் பகுதி ஆகிய இடங்களில் விற்பதாக அறிந்து, நேரில் சென்ற போலீசார், மூவாயிரம் ரூபாய் மதிப்பிலான 125 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, இதனை விற்ற மாதேஸ்வரன் (வயது56,),ராமலிங்கம், (60,) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!