கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு..!

கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்   குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு..!

கோப்பு படம்.

ஜேடர்பாளையம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

நாமக்கல்,

ஜேடர்பாளையம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி அருகே ஜமீன் இளம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (54). விவசாயி. இவர் அந்த பகுதியில் சாராய ஊரல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சி மறைமுகமாக விற்பனை செய்து வந்தார். அதன் காரணமாக ஜேடர்பாளையம் போலீசார் அண்ணாமலையை பல முறை கைது செய்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து வந்தனர்.

இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை, கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதியன்று, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துள்ளார் தகவல் கிடைத்ததும், ஜேடபர்பாளையம் போலீசார் அவரை கைது செய்து, கோர்ட் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

அண்ணாமலை தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக பல வழக்குகள் அவர் மீது இருப்பதால் அண்ணாமலையை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க, ப.வேலூர் டிஎஸ்பி சங்கீதா நடவடிக்கை எடுத்தார். நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையொட்டி, அண்ணாமலையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார், கள்ளச்சாராயம் காய்ச்சிய அண்ணாமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.

Tags

Next Story