நாமக்கல் : எருமபட்டியில் தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி சாலை மறியல்

நாமக்கல் : எருமபட்டியில் தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி சாலை மறியல்
X
பவித்திரம் மலைப்பாதையில் இருந்து தோட்டமுடையான்பட்டி செல்லும் தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் : எருமப்பட்டி ,பவித்திரம் மலைப்பாதையில் இருந்து தோட்டமுடையான்பட்டி செல்லும் தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலையின் தற்போதைய நிலை

எருமப்பட்டி யூனியன், பவித்திரம் மலைப்பாதையில் இருந்து, கொல்லிமலை அடிவாரம் தோட்டமுடையான்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த, 5 கி.மீ., சாலை, 3 ஆண்டுக்கும் மேலாக குண்டும், குழியுமாக இருந்தது.

புதிய சாலை அமைப்பதற்கான முயற்சிகள்

சிலமாதங்களுக்கு முன், புதிய சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, சாலை அமைப்பதற்காக சாலை கொத்திவிடப்பட்டது.

பொதுமக்களுக்கான சிரமங்கள்

இதன் காரணமாக, கடந்த, 5 மாதமாக வாகனங்கள் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். டூவீலர்களில் செல்லும் முதியவர்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.


தனியார் பள்ளி பஸ்கள் போக்குவரத்தை நிறுத்தம்

தனியார் பள்ளி பஸ்கள், சாலை மிகவும் மோசமாக இருப்பதால், போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.இந்த சாலை பணியை விரைந்து முடிக்க, அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பணிகள் முடிக்கப்படவில்லை.

பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று நாமக்கல் - துறையூர் சாலையின் குறுக்கே கயிற்றை கட்டி மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் பேச்சுவார்த்தை

தகவலறிந்து சென்ற இன்ஸ்பெக்டர் யுவராஜ், எஸ்.ஐ., சாந்தகுமார் மற்றும் பி.டி.ஓ., சுகிதா ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்க-ளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.இதனால், 2 மணி நேரம் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்