நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிறிய கூட்டரங்கில் இன்று (ஜனவரி 6) காலை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதை நிரம்பிய அனைத்து ஆண், பெண்களும் தவறாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியானவர்கள்
வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற 18 வயதை நிறைவு செய்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதற்காக வாக்காளர் பதிவு அலுவலகங்களை அணுகி படிவம் 6-ல் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர், அவை ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu