வட்டி கேட்டு துன்புறுத்தியதால் பட்டறை ஓனர் விபரீத முடிவு

வட்டி கேட்டு துன்புறுத்தியதால் பட்டறை ஓனர் விபரீத முடிவு
X
வட்டி கேட்டு துன்புறுத்தியதால் பட்டறை ஓனர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் : ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டியை சேர்ந்த 33 வயது நபர் விஜயகுமார், தொடர் கடன் தொல்லையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடன் தொல்லை காரணம்

கட்டனாச்சம்பட்டியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்த விஜயகுமார், ராசிபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனுக்கு தொடர்ந்து வட்டி கட்ட சொல்லி அந்த நபர் துன்புறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


போலீசார் விசாரணை

தற்கொலைக்கு முன்பு விஜயகுமார் எழுதி வைத்துள்ள கடிதத்தில், "எனக்கு ராசிபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளார். அதற்கு தொடர்ந்து வட்டி கட்ட சொல்லி துன்புறுத்தி வந்ததால், மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். என்னுடைய சாவுக்கு மாரிமுத்து தான் காரணம்" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ராசிபுரம் போலீசார் மாரிமுத்துவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்