புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம்..!

புதுக்கோட்டையில்  முன்னாள் அமைச்சர்  தலைமையில் ஆர்ப்பாட்டம்..!
X

மனித சங்கிலி போராட்டம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திமுக அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து சட்ட ஒழுங்கு முற்றிலுமாக சீர் கெட்டு உள்ளது.

தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது.போதை பொருள் பழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து புதுக்கோட்டை அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் அண்ணா சிலை அருகே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுக கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

அண்ணா சிலையில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலை எம்ஜிஆர் சிலை வரைக்கும் ஒருவர் ஒருவர் கைகோர்த்து நின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் மாவட்ட பகுதிகளில் இந்த மனித சங்கலி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அதிமுகவினரும் கருப்பு சட்டை அணிந்து திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!