சிவகங்கையில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு

சிவகங்கையில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு

சிவகங்கையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் பெர்னாண்டஸ் ரத்தினராஜ் பேசினார்.

சிவகங்கையில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா ஆய்வு கூட்டம் நடத்தினார்.

சிவகங்கையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் பெர்ணான்டஸ் ரத்தின ராஜா மேற்கொண்ட கலந்தாய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், மொத்தம் 93 பயனாளிகளுக்கு ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத் தலைவர் பெர்ணாண்டஸ் ரத்தின ராஜா , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி , முன்னிலையில், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத் தலைவர் பெர்ணாண்டஸ் ரத்தின ராஜா பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் பிரிவு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், சிறுபான்மையினரின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TAMCO) சிறுபான்மையினர் நலன் சார்ந்த அரசு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறுபான்மையினருக்கு சுயதொழில் மற்றும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்காக குறைந்த வட்டியில் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. அதில் இந்தாண்டில் ரூ.100 கோடி வரை வங்கிக் கடனுதவிகள் வழங்கிட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தனிநபர் கடனுதவி, விராசட் கடனுதவி, மைக்ரோ நிதி கடனுதவி மற்றும் கல்விக்கடனுதவி உள்ளிட்ட கடனுதவிக்கான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. சிறுபான்மையினரிடையே டாம்கோ கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக அரசு செயல்படுத்தும் இத்தகைய திட்டங்களை தகுதியான பயனாளிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதன் அடிப்படையில், அரசின் திட்டங்களை எளிதில் பெறமுடியும்.

மேலும், இக்கலந்தாய்வு கூட்டத்தின் வாயிலாக சிறுபான்மையினர் அமைப்புக்களைச் சார்ந்தவர்களின் பல்வேறு கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஆலயங்கள் சீரமைப்பு பணிகள் மற்றும் அடக்கஸ்தலங்கள் (மயானம்) அமைப்பதற்கான இடம் தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடைய கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, அரசின் திட்டங்களின் கீழ் தங்களை பயன்பெற செய்வதற்கான உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்/

இவ்வாறு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தலைவர் பெர்ணாண்டஸ் ரத்தின ராஜா தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் வாயிலாக சிறுபான்மையினர் நல பிரிவு அமைப்புகளைச் சார்ந்தோர்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 74 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளும் மற்றும் கூட்டுறவுத் துறையின் சார்பில், இளையான்குடி நகர கூட்டுறவு வங்கியின் மூலம் டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் 19 சிறுபான்மையினர் இன மக்களுக்கு தலா ரூ.1,00,000/- வீதம் மொத்தம் ரூ.19,00,000/- மதிப்பீட்டிலான பல்வேறு வகையான சிறுதொழில் கடனுதவிக்கான காசோலையினையும் என, மொத்தம் 93 பயனாளிகளுக்கு 93 பயனாளிகளுக்கு ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தலைவர் பெர்ணாண்டஸ் ரத்தின ராஜா வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, சிறுபான்மையினர் நலனுக்காக அரசு செயல்படுத்தப்பட்டு வரும் டாம்கோ கடன் திட்டங்களின் கீழ் சிறுதொழில்களுக்கான கடனுதவி பெற்று, பயன்பெற்று வரும் பயனாளிகளை, சிவகங்கை நேரு பஜார் பகுதியில் நேரில் சந்தித்து, திட்டப் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி , இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், மேலாண்மை இயக்குநர் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) உமா மகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெயமணி, சிறுபான்மையினர் நல பிரிவு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பயனாளிகள், அரசுஅலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story