சிவகங்கை அருகே மக்கள் தொடர்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல்

சிவகங்கை அருகே மக்கள் தொடர்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

சிவகங்கை அருகே ஏரியூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் ஏரியூர் கிராமத்தில் வருகின்ற 10ம் தேதியன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.எஸ்.கோட்டை உள்வட்டம், ஏரியூர் குரூப், ஏரியூர் கிராமத்தில், வருகின்ற 10.10.2024அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.

மக்கள் தொடர்பு முகாமில், அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச்செய்வதே இம்மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.

எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்புமுகாமில், கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன் பெறலாம்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!