காரைக்குடியில் ரூ.77.11 கோடி வளர்ச்சி தி்ட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காரைக்குடியில் ரூ.77.11 கோடி வளர்ச்சி தி்ட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

காரைக்குடியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.

காரைக்குடி மாநகராட்சி பகுதியில் ரூ.77.11 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும்12 வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தற்சமயம்ரூ.77.11 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் 12 வளர்ச்சித் திட்ட பணிகள்குறித்து,மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, இன்றைய தினம் (23.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், ஆய்வு மேற்கொண்டார்.

அவர் கூறுகையில் தமிழக அரசு, பொதுமக்களின்நலனைக் கருத்தில் கொண்டுபல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து,சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், மக்கள் நலத்திட்டங்கள் மட்டுமன்றி, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திடும்பொருட்டு, அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு தேவையானஅனைத்துஅடிப்படைவசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அதில் கலைஞர்நகர்ப்புற மேம்பாட்டுதிட்டம் 2022-23ன் கீழ் கண்ணதாசன் மணிமண்டப வளாகத்தில் ரூ.185.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையம், ரூ.145.00 இலட்சம் மதிப்பீட்டில் கழனிவாசல் பகுதியில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடை, நமக்கு நாமே திட்டம் 2022-23ன் கீழ் தேவர் சிலை முதல் பெரியார் சிலை வரை 100 அடி சாலையின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தலா ரூ.40.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் மூடியுடன் கூடிய கழிவுநீர் கால்வாய் மற்றும் நடைபாதை அமைத்தல், ரூ.05.00 இலட்சம் மதிப்பீட்டில் தேவர் சிலை முதல் பெரியார் சிலை வரை மின்விளக்குகள் அமைக்கும் பணி, மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி 2022-23ன் கீழ் ரூ.368.94 இலட்சம் மதிப்பீட்டில் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணி, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்புத் திட்டம் 2022-23 ன் கீழ் முத்துப்பட்டினம் பகுதியில் ரூ.51.00 இலட்சம் மதிப்பீட்டிலும், கழனிவாசல் பகுதியில் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டிலும், வெங்கடாச்சலம் செட்டியார் தெரு மற்றும் செல்லப்பன் தெரு ஆகிய பகுதிகளில், ரூ.75.20 இலட்சம் மதிப்பீட்டிலும், விவேகாநந்தர் தெரு, ஆலங்குடியார் தெரு மற்றும் சுப்பையா தெரு ஆகிய பகுதிகளில் ரூ.76.90 இலட்சம் மதிப்பீட்டிலும், சிதம்பரம் ஆசாரி லேஅவுட், சிதம்பரம் லேஅவுட் மற்றும் கண்ணதாசன் நகர் பகுதிகளில் ரூ.23.70 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் கண்மாய் தெரு, சிதம்பரம் தெரு, நேதாஜி தெரு ஆகிய பகுதிகளில் ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆறுமுகம் நகர் மற்றும் அய்யனார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.87.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சர்ச் தெரு, ஓ.சிறுவயல் சாலை, பாண்டி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.74.00 இலட்சம் மதிப்பீட்டிலும் என, மேற்கண்ட பகுதிகளில் தார் சாலைகள் அமைத்தல் பணியும்,

அம்ருத் 2.0 திட்டம் 2022-23ன் கீழ் ரூ.41.00 இலட்சம் மதிப்பீட்டில் செக்காலை தெப்பக்குளம் மற்றும் ரூ.62.00 இலட்சம் மதிப்பீட்டில் செல்லம்செட்டி ஊரணியில் புனரமைப்பு பணியும், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் திரு.வி.க தெரு, ஆதிதிராவிடர் தெரு ஆகிய பகுதிகளில் பேவர் பிளாக் அமைக்கும் பணியும், 15 வது நிதிக்குழு 2022-23ன் கீழ் ரூ.160.24 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைக்கென, பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பேட்டரி வாகனங்களும், ரூ.12.75 இலட்சம் மதிப்பீட்டில் 4,424 Miawakki மரக்கன்றுகள் நடும் பணியும்,15 வது நிதிக்குழு 2023-24ன் கீழ் ரூ.171.00 இலட்சம் மதிப்பீட்டில் டி.டி நகர், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் தார் சாலைகள் அமைக்கும் பணி, 15 வது நிதிக்குழு 2024-25ன் கீழ்ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் சுப்பிரமணியபுரம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி, நூற்றாண்டு திட்டம் 2023-24ன் கீழ் இராமநாதன் செட்டியார் பள்ளியில் ரூ.09.03 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கும் பணி என மொத்தம் 28 பணிகள் ரூ.18.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.

இதுதவிர, 2022-2023, 2023-2024 மற்றும் 2024-2025 ஆம் நிதியாண்டின் கீழ் பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-24ன் கீழ் ரூ.619.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தையின் கட்டுமானப் பணிகள், ரூ.395.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழைய பேருந்து நிலையம் புதுப்பித்தல் பணி, மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி 2022-23ன் கீழ் ரூ.600.00 இலட்சம் மதிப்பீட்டில் குழாய் பதிக்கும் பணிகள், அம்ருத் 2.0 திட்டம் 2023-24ன் கீழ் ரூ.2,331.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தினசரி குடிநீர் விநியோகத்திற்கானபணி, ரூ.3,371.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணி,2023-24 பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்ரூ.68.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆலங்குடியார் நகராட்சி ஆரம்ப பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பள்ளி வகுப்பறைகள் கட்டுமானப் பணி, 2024-25 பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்ரூ.45.50 மதிப்பீட்டில் இராமநாதன் செட்டியார் உயர்நிலை பள்ளி மற்றும் கழனிவாசல் நடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டுமானப் பணிகள்,திட்ட மேலாண்மை 2023-24ன் கீழ் ரூ.142.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் மற்றும்

பாதாள சாக்கடை பணிகள், ஒப்புதல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு திட்டம் 2023-24ன் கீழ் காரைக்குடிக்குட்பட்ட பகுதியில் 16MLD கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கென ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், தூய்மை இந்தியா திட்டம் 2023-24ன் கீழ் ரூ.79.28 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொது கழிப்பறை மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைப்பு பணிகள் என மொத்தம் 12 வளர்ச்சி திட்ட பணிகள் ரூ.77.11 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறாக, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகளை விரைந்து தரமான முறையில் குறித்த காலத்திற்குள் முடிக்கப்பெற்று பயன்பாட்டிற்கு வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் எஸ்.சித்ரா, மாநகராட்சி உதவி பொறியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்