அடவினார் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

அடவினார் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
X

அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் நீர் திட்டத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தென்காசி மாவட்டம் அடவினார் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தமிழக அரசின் உத்தரவுப்படி தண்ணீர் இன்று திறந்து வைக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளன.

அந்த வகையில் செங்கோட்டை வட்டம் மேக்கரை கிராமத்தில் அமைந்துள்ள அடவி நைனார் தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது மொத்தம் 136 அடி உயரம் கொண்ட இந்த நீர் தேக்கத்தில் 114 அடி அளவுக்கு தண்ணீர் நிறைந்துள்ளது.

இதற்கிடையே பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று பாசனத்திற்காக நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) அமிர்த லிங்கம் பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.இன்றிலிருந்து அடுத்த 105 நாட்களுக்கு 60 கன அடிக்கு மிகாமல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் மேட்டுக்கால்வாய், கரிசல் கால்வாய், பண்பொழி கால்வாய், வல்லாக்குளம் கால்வாய், இலத்தூர் கால்வாய், நயினாரகரம் கால்வாய், கிளங்காடு கால்வாய், கம்பளி கால்வாய், புங்கன் கால்வாய், சாம்பவர்வடகரை கால்வாய் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் மொத்தம் 7,643.15 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!