மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்..!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்..!
X

மக்களவைத் தேர்தல் மின்னணு வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

தென்காசி மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு ஆட்சியர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

.தென்காசி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு ஆட்சியர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 1,743 வாக்கு சாவடிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. தென்காசி மக்களவைத் தொகுதியில் மட்டும் 67.55. சதவீத வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவி பேட் ஆகியவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தென்காசி கொடி குறிச்சியில் உள்ள யு.எஸ்.பி பாலிடெக்னிக் கல்லூரியில் கொண்டுவரப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அனைத்து வாக்கு பெட்டிகள் உள்ள பாதுகாக்கப்பட்ட அறைக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

இதனையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள யூ.எஸ்.பி கல்லூரியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு உள்பட ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story