திருச்சி அருகே அதிமுக வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

திருச்சி அருகே  அதிமுக வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
X

திருச்சி சோமரசம்பேட்டையில் அதிமுகவினர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திருச்சி அருகே அதிமுக வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக வின் ௫௩வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தின் மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது அதிமுக என்கிற பேரியக்கம். திரைப்பட நடிகராக தமிழக மக்களின் இதயத்தில் மக்கள் திலகமாக இடம்பெற்றிருந்த எம்ஜிஆர் திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுக்காக கடந்த 1972 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ௧௭ந்தேதி இதே நாளில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று அதன் ௫௩ வது ஆண்டில் அடி எடுத்து வைத்து இருக்கிறது.


அதிமுகவின் ஐம்பத்து மூன்றாவது ஆண்டு தொடக்கவிழாவை தமிழகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடும்படி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கட்சியின் தொண்டர்களுக்கு கட்டளையிட்டு இருந்தார்.

இதன்படி இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கட்சியின் ஐம்பத்து மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவை சிறப்பாக கொண்டாடினர்.

அந்த வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இந்த விழா திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டையில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு பரஞ்ஜோதி தலைமை தாங்கி எம்ஜிஆர் சிலை மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த விழாவில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான மனோகரன், முன்னாள் அமைச்சர் சிவபதி, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்