வாணியம்பாடி அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு
X

உயிரிழந்த ஆடுகள்

வாணியம்பாடி அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக முன்பு வீட்டின் அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் 10 ஆடுகள் இறந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்து அந்த கிராமத்தில் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அதே கிராமத்தை சேர்ந்த திருவேல், கருணாகரன், சங்கத்து வட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் தவமணி ஆகியோர் வளர்த்து வந்த 15 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது. இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. 8 ஆடுகள் பலத்த காயம் அடைந்துள்ளது.

தகவல் அறிந்து வனத்துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிராம மக்கள் அதிகாரிகளிடம் ஆடுகளை கடித்த மர்ம விலங்கு எது என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும், இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

நாட்டறம்பள்ளியில் பிடிபட்ட 3 பாம்புகள்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த செங்கான் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அதே பகுதியில் ஆயில் அரைக்கும் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை ஆயில் கடையை திறந்தார். அப்போது கடையின் உள்ளே பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு பிடித்தனர். ஜோலார்பேட்டை அடுத்த திரியாலத்தை சேர்ந்தவர் வேலன். நேற்று இரவு இவரது வீட்டின் பின்புறம் மின் விளக்கு போடுவதற்கு சென்றார்.

வீட்டின் பின்புறம் பாம்பு இருந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவம் இடத்திற்கு சென்று 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர். இதேபோல் நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியில் வீட்டில் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர். நேற்று முன்தினம் இரவு மற்றும் இன்று காலை தொடர்ந்து 3 பாம்புகள் பிடிக்கப்பட்டது. பாம்புகளை திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!