திருப்பூர் எம்பியை "கண்டா வரச் சொல்லுங்க" என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

திருப்பூர் எம்பியை கண்டா வரச் சொல்லுங்க என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

கேள்விக்குறியோடு ஏங்க கண்டா எம்.பியை வரச்சொல்லுங்க என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர். 

Poster Advertisement At Tirupur திருப்பூரில் கண்டா வரச்சொல்லுங்க என ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பாகியுள்ளது.

Poster Advertisement At Tirupur

தேர்தல் என்றாலே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்குங்க...அது சட்டசபைத் தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுத்தேர்தலாக இருந்தாலும் 5ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். ஆனால் ஒரு சில தொகுதிகளில் தேர்தலின் போது வாக்கு கேட்க செல்லும் வெற்றி பிரதிநிதிகள் அதற்கு பிறகு அந்த தொகுதிப்பக்கமே செல்லாமல் இருப்பவர்களும் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றனர். மனசாட்சியே இல்லாமல் இதுபோல் செய்யும் ஒரு சில பிரதிநிதிகளால் அந்த கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதோடு மற்ற கட்சிக்காரர்களுக்கும் இது ஒரு மைனஸ்தான். காரணம் போனதடவை ஜெயித்தவரே தொகுதிப் பக்கம் வரல நீங்க மட்டும் வந்துடுவீங்களாக்கும் என பார்ப்பது போல இருக்கும். அந்த வகையில் திருப்பூர் எம்பியைப் பற்றி போஸ்டர் அடித்து ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் திருப்பூர் எம்பி தொகுதி பக்கம் காணவில்லை எனவும் அவரை "கண்டா வரச் சொல்லுங்க " என திருப்பூர் மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகி சுப்பராயன்.

இவர் கடந்த 2019 தேர்தலில் திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நின்ற ஆனந்தனை எதிர்த்து கதிர்அருவாள் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

மீண்டும் தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்குவதாக பரபரப்பான தகவல்கள் பரவி வரும் நிலையில் அதே இடத்தில் சுப்பராயன் மீண்டும் போட்டியிடுவார் என தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த முறை வெற்றி பெற்று திருப்பூர் எம்பி தொகுதியில் உள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு, கோபி, அந்தியூர், பெருந்துரை சட்டமன்ற தொகுதி சுற்றுவட்டார பகுதிகளில் மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்ய வந்ததில்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருக்கின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் "கண்டா வர சொல்லுங்க" எங்கள் தொகுதி எம்.பி.யை எங்கேயும் காணவில்லை இப்படிக்கு திருப்பூர் பாராளுமன்ற தொகுதி மக்கள் என போஸ்டர் அடித்து சந்து பொந்து உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளதுஇச்சம்பவம் பொதுமக்கள், வாக்காளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story