ஆவடி அருகே காரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

ஆவடி அருகே காரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
X

கைது செய்யப்பட்ட தனுஷ், விஜய்.

ஆவடி அருகே காரை வழி மறித்து வழிப்பறியில் ஈடுபட்டு பணத்தை பறித்து தப்பி சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி அருகே காரில் சென்றவரை தாக்கி வழிப்பறி செய்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் வேலன் ( வயது 36).இவர் கடந்த 23 ந் தேதி அன்று ஆயலூர் கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர் கோபி உடல் நிலம் சரியில்லாத காரணத்தால் அவரை சென்னை கே.கே நகரில் உள்ள இஎஸ்சி மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த காரில் கோபி மனைவி மற்றும் மற்றொரு நண்பரான ராஜேஷ் ஆகிய 4 பேர் பயணித்துள்ளனர்.கோபிக்கு சிகிச்சை முடிந்து மீண்டும் ஆயலூர் நோக்கி இரவு 11 மணி அளவில் காரில் வந்துள்ளனர்.

அப்போது கோயம்பாக்கம் பகுதியில் கார் வந்தபோது சாலை நடுவில் இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி இருவர் கார் சாவியை பிடுங்க முயன்ற போது சாவி உடைந்து கார் ஆப் ஆகியுள்ளது.

பின்னர் அந்த நபர்கள் மது போதையில் காரின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டது மட்டுமின்றி செந்தில் வேலன் பாக்கெட்டில் இருந்த 1700 ரூபாய் பணத்தை பறித்து அங்கிருந்து தப்பியுள்ளனர்.இதுகுறித்து கார் உரிமையாளரும் ஓட்டுநரான செந்தில்வேலன் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அத்தகைய நபர்கள் ஆயலூர் பகுதியைச் சேர்ந்த வழிப்பறி மற்றும் அடிதடி மூன்று வழக்கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற கலெக்டர், மற்றும் அவனுடைய கூட்டாளியான தனுஷ் எனபோலீசாருக்கு தெரியவந்தது.அதில் தனுஷை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 700 ரூபாய் பணம் பறிமுதல் செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளி விஜய் என்ற கலெக்டரையும் போலீசார் கைது செய்து அவனிடமிருந்து 400 ரூபாய் பறிமுதல் செய்து அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!