தீப்பற்றி எரிந்த குடிசை வீடு; ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

தீப்பற்றி எரிந்த குடிசை வீடு; ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
X

குடிசையில் ஏற்பட்ட தீ விபத்து

பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணை கிராமத்தில் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்ததில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமானது.

பெரியபாளையம் அருகே குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் 1 சவரன் நகை மிக்ஸி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம் மஞ்சங்கரணை ஊராட்சிக்கு உட்பட்ட கூரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயியான வேதகிரி (வயது 58), மனைவி சாந்தி( வயது 48). இவர்களது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.எனினும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாக குடிசை வீடு முற்றிலுமாக தீக்கு இறையானது.இதில் வீட்டிலிருந்த 1 சவரன் நகை, மிக்ஸி, கிரைண்டர், டிவி மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட 4.லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து விட்டது.

இந்த தீ விபத்து குறித்து பெரியபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது பட்டாசு வெடித்த போது அதிலிருந்து வெளியேறிய தீப்பொறிகள் குடிசையில் விழுந்து தீ பற்றியதா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!