தீபாவளி செலவிற்கு பணம் இல்லாததால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தீபாவளி செலவிற்கு பணம் இல்லாததால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கோவிந்தன்.

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் தீபாவளி செலவிற்கு பணம் இல்லாததால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டியில் கூலி தொழிலாளி வேலையின்றி தீபாவளி செலவிற்கு பணம் இல்லாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கோவிந்தன் ( வயது 48). கட்டுமான பணி மட்டுமின்றி கிடைக்கும் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகனும், மகளும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

அண்மை காலமாக கோவிந்தனுக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. நேற்று நாடு முழுவதிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில் கோவிந்தன் வேலையின்றி தீபாவளி செலவிற்கு பணம் கிடைக்காமல் விரக்தியில் இருந்துள்ளார். நேற்றிரவு இவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த போது மன உளைச்சலில் இருந்த கோவிந்தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வீடு திரும்பிய இவரது குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி செல்விற்கு பணம் இல்லாமல் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்