நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலி: சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்

நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலி: சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்
X

செய்தி எதிரொலியாக ஜே சி பி எந்திரம் கொண்டு குப்பைகள் அகற்றும் பணியில.

கும்மிடிப்பூண்டி அருகே சத்தியவேடு கவரப்பேட்டை சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு குறித்து நேட்டிவ் செய்தி இணையதளத்தில் வெளியானதை அடுத்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டை சுற்றுப்பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் நாள்தோறும் வீடுகள், மற்றும் வணிக நிறுவனங்களில், கடைகள், உணவகங்களில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில் சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன.

ஊராட்சிக்கு சொந்தமான டிராக்டர்களில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளில் முறையாக சுத்திகரிக்கப்படாமல் திறந்தவெளியில் சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி வந்தது.

குப்பை, கழிவுகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மலேரியா போன்ற பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் சூழலும் கழிவுகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளை அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் பன்றிகள் கிளறி சாலையில் கொண்டு வந்து போடுவதாகவும் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனங்கள் அந்த குப்பை கழிவுகளின் சிக்கி விபத்துக்களை சந்தித்து வந்தனர்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேட்டிவ் ப்ளஸ் செய்தி இணையதளத்தில் நேற்று செய்தி வெளியானதை அடுத்து இதன் எதிரொலியாக இன்று சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை ஜே.சிபி. இயந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இப்பகுதியில் யாரும் குப்பை கழிவுகளை கொட்ட கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் செய்தி வெளியிட்ட நேட்டிவ் செய்தி இணையதளத்திற்கு அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலரும் தாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்