மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் : தந்தை,மகள் கைது..!

மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் : தந்தை,மகள்  கைது..!
X

கைது செய்யப்பட்ட தந்தை, மகள்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் கொலை செய்து சூட்கேஸில் கொண்டுவந்த தந்தை மற்றும் மகளை போலீசார் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் கைது செய்தனர்.

ஆந்திராவில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து சூட்கேசில்வைத்து மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு கொண்டுவந்த தந்தை, மகளை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில் நேற்று (ஞாயிறு) இரவு மீஞ்சூர் ரயில் நிலையம் வந்தபோது அதிலிருந்து இறங்கிய தந்தை, மகள் இருவரும் சூட்கேஸ் ஒன்றை ரயில் நிலைய பிளாட்பார்மில் இறக்கி வைத்து விட்டு வேகமாக செல்ல முற்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக அவர்களை மடக்கி பிடித்து சூட்கேஸ் அருகே வந்து பார்த்தபோது அதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் சந்தைபேட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது-43), அவரது (17-வயது) மகள் என்பதும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் தொழிலுக்கு அழைத்ததால் வர மறுத்து அவரை தலையில் அடித்து கொலை செய்ததால் சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த ரயில் ஏறி மீஞ்சூர் ரயில் நிலையத்தில் போட்டுவிட்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் அளித்த தகவலின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். கை, கால்களை மடக்கி தலையை மடித்து 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் சூட்கேசில் கிடந்துள்ளது. தொடர்ந்து இரவு முழுவதும் நடத்திய விசாரணையில் பொற்கொல்லரான பாலசுப்ரமணியம் நெல்லூரை சேர்ந்த மூதாட்டி மன்னம் ரமணி(வயது 65) நகைக்காக ஆசைப்பட்டு அவரை வீட்டிற்கு வரவழைத்து பெட்ஷீட்டை தலையில் போட்டு மூடி கழுத்தை இறுக்கி கொலை செய்து அவர் அணிந்திருந்த தாலி சரடு, செயின், கம்மல் என 50கிராம் தங்க நகைகளை திருடிக்கொண்டதாகவும், சடலத்தை சூட்கேசில் அடைத்து கொண்டு வந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை வழக்கு பதிந்து தந்தை, மகள் இருவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சூட்கேசில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்