பள்ளி வளாகத்தில் பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை!

பள்ளி வளாகத்தில் பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை!
X

பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை

பெரியபாளையம் அருகே குருவாயல் ஊராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்ற மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி, எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் குருவாயல்,அரிக்கம்பட்டு, சேத்துப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், அத்தங்கி காவனூர், கிளாம்பாக்கம், உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 400.க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பள்ளி வளாகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 60,000 கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்தக் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டில் இருந்து தண்ணீர் நிரப்பி பைப்புகள் மூலம் குருவாயல் ஊராட்சி மக்களுக்கு காலை, மாலை என இருவேளைகளில் குடி தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனை எடுத்து இந்த குடிநீர் தொட்டி 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் இதன் தூண்கள் பழுதடைந்து சிமெண்ட் பூசுகள் பெயர்ந்து கட்டிடத்தில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி காணப்படுகின்றது.


மேலும் இந்த குடிநீர் தொட்டி அமைந்திருக்கும் இடத்தின் அருகாமையில் மாணவர்கள் பயன்படுத்திய வரும் கைவறையும் உள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளி இடைவெளியில் இப்பகுதியில் நடமாட்டம் அதிகமாகவே இருப்பதால் இந்த பழுதடைந்த தொட்டி எந்த நேரத்திலும் சரிந்து முறிந்து கீழே விழும் வாய்ப்புள்ளது.இந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்றிட வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு வைக்கும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். மாணவர்களின் நாளை கருதி இந்த பழுதடைந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்களும், மாணவர்கள் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்