திருவள்ளூரில் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூரில் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணி
X

விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மிகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பபட்டுள்ள முதியோர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார் முன்னிலையில் பள்ளி மாணவர்களால் ஏற்கப்பட்டது.


மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒலி அறிவிப்புகளுடன் கூடிய மூன்று ஆட்டோக்கள் மூலம் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஆட்டோக்களை மாவட்ட கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த பிரச்சார பேரணியில் 200 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில்,மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன்,உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கயல்விழி, ஸ்ரீலேகா மற்றும் சபரிநாதன்,மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!