அரசு பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு: ஒரே ஆசிரியரிடம் பயின்ற தந்தை,மகன் ஆசி..!

அரசு பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு: ஒரே ஆசிரியரிடம் பயின்ற  தந்தை,மகன் ஆசி..!
X

ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

ஆரணியில் அரசு பள்ளியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

ஆரணியில் 96-97 ஆம் ஆண்டு பிளஸ் டூ பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமை வகித்தார் .செயலாளர் சுதாகர், கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மைதிலி அனைவரையும் வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் செந்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் முன்னாள் மாணவர்கள் பயின்ற காலத்தில் பணி புரிந்த ஆசிரியர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் முன்னாள் மாணவர்கள் பயின்ற காலத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது விழாவில் மாணவர்கள் ஆசிரியர்களும் பள்ளி காலத்தில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் ஒரே ஆசிரியரிடம் பயின்ற தந்தை மகனும் ஒன்றாக வந்து ஆசிரியரிடம் ஆசி பெற்றது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் மாணவர்கள், தற்போதைய ஆசிரியர்கள் , பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆரணியில் வட ஆற்காடு கலை இலக்கிய வெளி தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வட ஆற்காடு கலை, இலக்கிய வெளி தொடக்க விழா நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் அமைப்பின் லட்சினையை வெளியிட்டு, அமைப்பை தொடங்கிவைத்தனா். மேலும், எழுத்தாளா்கள் எழுதிய கவிதை நூல்கள் விமா்சனம் நடைபெற்றது. இதில் எழுத்தாளா் இளையதமிழன் வரவேற்றாா்.

எழுத்தாளா் ஈ.ர.மணிகண்டன், முனைவா் அமுல்ராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.வரலாற்று ஆய்வாளா் விஜயன், எழுத்தாளா் பவித்ரா நந்தகுமாா், முனைவா் விஜயகாந்த், ஆசிரியை அமலா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

முன்னதாக, வட ஆற்காடு கலை இலக்கிய வெளியின் சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது. நிறைவில் சுபாஷ் முகிலன் நன்றி கூறினாா். இவ்விழாவில் ஏராளமான ஆசிரியர்கள் ,எழுத்தாளர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்