கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்!

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்!
X

சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்த தரணி வேந்தன் எம் பி

ஆரணியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மட்டதாரி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் நடைபெற்ற கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

சிறப்பு மருத்துவ முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத் அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் கலந்து கொண்டார்.

மேலும் இம்மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், குழந்தை நலம் மகப்பேறு மருத்துவம், தோல் நோய், பல் மருத்துவம், சித்த வைத்தியம் இருதய நோய் சிகிச்சைசக்கரைநோய் பிரிவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. இதனையடுத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு 12 பொருட்கள் அடங்கிய குழந்தை நல பரிசு பெட்டகங்களை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன்கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கினார். பின்னர் முகாமில் பொது மக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு மருத்து வர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, ஆரணி நகர மன்ற தலைவர் மணி ,ஒன்றிய செயலாளர்கள் , மாவட்ட கவுன்சிலர்கள் , சுகாதார மேற் பார்வையாளர்கள்,சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன், செவிலியர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பகுதி நேர நியாய விலை கட்டிடம் திறப்பு விழா

செய்யாறு அடுத்த ராந்தம் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியம், ராந்தம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டப்பட்ட நியாய விலைக் கடையின் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி , தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் பகுதி நேர புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் , மாவட்ட கவுன்சிலர்கள் , துறை சார்ந்த அரசு அலுவலர்கள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்