புதுப்பாளையம் ஒன்றிய அரசு மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கல்

புதுப்பாளையம் ஒன்றிய அரசு மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கல்
X

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரவணன்  எம்எல்ஏ

புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை எம்எல்ஏ வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மிதிவண்டி வழங்கினார்.

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 113 மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், பேரூராட்சி தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் காந்திமதி, அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சரவணன் எம்எல்ஏ தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டியை மாணவர்களுக்கு வழங்கி பேசியதாவது,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படிக்கும் மாணவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வழங்கி வருகிறார். அதில் மாணவர்கள் தொலைதூரத்தில்இருந்து வருவதால் அவர்களுக்கு விலையில்லா மிதி வண்டியும், அதிக தொலைதூரத்தில் வரும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வசதியும் வழங்கி வருகிறார். அதேபோல் படிக்கும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி கற்றல் கற்பித்தல், நான் முதல்வன் என்ற பல்வேறு திட்டங்களை படிக்கும் மாணவர்களுக்காக வழங்கி வருகிறார். அதையும் தாண்டி பெண் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டம், ஆண் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு தமிழ் புதல்வன் திட்டம் என்ற திட்டத்தில் மாதந்தோறும் பெண் பிள்ளைகளுக்கும் ஆண் பிள்ளைகளுக்கும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. இப்படி எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதுப்பாளையம் மாதிரி பெண்க ள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 113 மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டியை வழங்கப்படுகிறது என்று சரவணன் எம்எல்ஏ பேசினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, நகர செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ரஞ்சித்குமார், அன்புச்செல்வன், நித்யா ஜெயபிரகாஷ், அரசு ஒப்பந்ததாரர் செல்வகுமார், ஊராட்சி மன்றதலைவர்கள் சுந்தரம், பூங்காவனம் , உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பள்ளி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!