ஜவ்வாதுமலையை சுற்றுலாத் தலமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ஜவ்வாதுமலையை சுற்றுலாத் தலமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

 ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  தமிழக ஆதிவாசி கூட்டமைப்பினா்

ஜவ்வாதுமலையை சுற்றுலாத் தலமாக மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து, தமிழக ஆதிவாசி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜவ்வாதுமலையை சுற்றுலாத் தலமாக மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலையில் தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கூட்டமைப்பு மற்றும் தமிழக பழங்குடியினா் இளைஞரணி சாா்பில் நடைபெற்ற இந்த இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஆதிவாசிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

இதில், தமிழகத்தில் அனைத்து மலைப் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கத் தடையாக உள்ள தடை ஆணை 1168-ஐ தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

மலைப் பகுதிகளில் விவசாயம் செய்து வரும் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலையை சுற்றுலாத்தலமாக மாற்றக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், கூட்டமைப்பு நிா்வாகிகள், உறுப்பினா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக ஆதிவாசிகள் அமைப்புகளின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் வெங்கடேசன் கூறுகையில், ஜவ்வாதுமலையை சுற்றுலாத்தலமாக மாற்றினால் காலம், காலமாக வசித்து வரும் எங்களின் உரிமைகள் பறிபோய் விடும். ஜவ்வாதுமலையே அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்.

சாமை, தினை, வரகு போன்ற மலைப்பயிா்கள் சாகுபடி பாதிப்பு ஏற்படும். எனவே, ஜவ்வாதுமலையை சுற்றுலாத்தலமாக அறிவிக்கக் கூடாது என்றாா்.

சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் எதிரே நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் வேலவன் தலைமை வகித்தார்.

போளூர் கிளைச் செயலாளர் மணி முன்னிலை வகித்தார் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்டத் தலைவர் ஏழுமலை கலந்து கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story