அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா

அம்மன் சன்னதியில் கொடியேற்றம், பைல் படம்

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். தட்சிணாயின புண்ணியகாலம் , உத்தராயணம் புண்ணியகாலம், தீப உற்சவம், ஆடிபுரம் என கொடியேற்றம் நடைபெறும்.

அதில் மூன்று கொடியேற்றம் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றமும் ஒரு கொடியேற்றம். உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் ஏற்றப்படும்.

ஆடிப்பூரம் விழா

இவ்வரிடத்திற்கான ஆடிப்பூரம் விழா வருகின்ற திங்கட்கிழமை 29ஆம் தேதி பரணி நட்சத்திரத்தில் காலை 6 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கடக லக்னத்தில் உண்ணாமுலையம்மன் சன்னதி முன் உள்ள தங்க கோடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான ஆடிப்பூரமன்று தீமிதி விழா நடைபெறும் .

ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதி ஆடிப்பூரம் அன்று காலை பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அபிஷேகமும் மாலை வளைகாப்பு மண்டபத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் அபிஷேகம் மற்றும் வளைகாப்பு உற்சவம். இரவு பராசக்தி அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.

அன்று இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமுலையம்மன் சன்னதிக்கு முன்பு தீமிதி விழாவும் அதனைத் தொடர்ந்து பராசக்தி அம்மன் திருவீதி உலாவும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜோதி, மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், மற்றும் அறங்காவலர்கள் ராஜா ராம், கோமதி குணசேகரன், பெருமாள், மீனாட்சி சுந்தரம், கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story