வந்தவாசி அருகே புதிய உயர்மட்ட பாலம் திறப்பு

வந்தவாசி அருகே புதிய உயர்மட்ட பாலம் திறப்பு

புதிய உயர்மட்ட பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு

வந்தவாசி அருகே புதிய உயர்மட்ட பாலத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை அருகே ரூபாய் 8.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொழப்பலூர் விநாயகபுரம் சாலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாகநபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8.47 கோடி மதிப்பீட்டில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, அம்பேத்குமார், ஜோதி, சரவணன் முன்னிலை வகித்தனர்.

புதிய உயர்மட்ட பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற உடன் தமிழ்நாடு முழுவதும் தரைபாலங்களை எல்லாம் உயர்மட்ட பாலங்களாக மாற்ற வேண்டுமென ஆணையிட்டார்கள், ஆறுகளில் வெள்ளம் ஏற்படுகிற பொழுது தரைப்பாலங்கள் ப ய ன்ப டுவதி ல்லை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கிவிடும். பொதுவாக, பாலம் என்பது பயன்பாட்டிற்காக கட்டப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து தரை பாலங்கள் கட்டப்பட்டிருகிறது.

அவ்வாறு கணக்கெடுத்ததில் தமிழ்நாட்டில் மொத்தம் 1281 தரைப்பாலங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஐந்தாண்டு ஆட்சி காலத்திற்குள் அவற்றைகட்டி முடிக்க வேண்டுமென்று ஆணையிட்டார்கள். அதன்படி தரைப்பாலங்கள் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு ஆட்சிப்பொறுபேற்ற இந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டில் 906 உயர்மட்ட பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது . ஏனைய பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும். பொதுவாக, ஆற்று வெள்ளம் ஏற்படுகிற பொழுது ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு கடந்து போக முடிவதில்லை. எனவே இந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பாலம் கட்டவேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.

இந்த பாலம் கட்டுவதன் மூலம் இப்பகுதியை சுற்றியுள்ள ஏறத்தாழ 15க்கும் பேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாய பெருங்குடிமக்கள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் பாலம் தேவைப்படுகிறது. எனவே, விவசாயிகளுக்கும் பள்ளிச் செல்லுகின்ற மாணவியர்களுக்கும் இப்பாலம் கட்டுவதன் மூலம் பெரும் உதவியாக இருக்கும். எனவே இந்த பாலத்தை கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை ஆலோசனை செய்து, உள்ளாட்சித்துறையின் மூலமாகநபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8.47 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டப்பட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி அளித்தார்கள். அதனடி ப்படை யி ல் இந்த பாலம் சிறப்பாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்கிற திராவிட மாடல் ஆட்சியை நடத்துகிறார்கள். எனவே பொதுமக்கள் இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தெரிவித்தார்கள.

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பார்வதி சீனிவாசன், செய்யாறு சார் ஆட்சியர் செல்வி பல்லலி வர்மா, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மணி, பெரணமல்லூர் ஒன்றியக்குழுத் தலைவர் இந்திரா, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story