காரியாபட்டி அருகே விவசாயிகளுக்கு உரம் பயன்பாடு பயிற்சி

காரியாபட்டி அருகே விவசாயிகளுக்கு உரம் பயன்பாடு பயிற்சி
X

காரியாபட்டியில் விவசாயிகளுக்கு பயற்சி முகாம் நடை பெற்றது.

காரியாபட்டியில் விவசாயிகளுக்கு இயற்கை உரம் பயன்பாடு பற்றிய பயிற்சி முகாம் நடந்தது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வேளாண்மை துறை தொழில் நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) விரிவாக்க சீரமைப்பு திட்டம் சார்பாக ஒருங்கி ணைந்த இயற்கை உரங்கள் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

பயிற்சி முகாமில், தொழு உரம், பசுந்தால் உரம், பசுந்தலை உரம், மண்புழு உரம், அசோஸ் பைரில்லம் , பாஸ்போ பாக்ட்டீரியா போன்ற இயற்கை உரங்களை, பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது.

பயிற்சி முகாமில், வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராணி , உதவி அலுவலர் அருள்மொழி , துணை அலுவலர் ராமச்சந்திரன், உழவர் சந்தை துணை வேளாண்மை அலுவலர ஐயப்பன், வேளாண்மை ஆலோசகர் சந்திர சேகரன், ஆத்மா திட்ட ஒருங்கிணைப் பாளர் முத்து கருப்பன், தொழில் நுட்ப உதவியாளர்கள்கள் கணேஷ் குமார், அருண்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!