திருத்தங்கல் பஸ் நிலையத்தை திறக்க கோரிக்கை..!

திருத்தங்கல் பஸ் நிலையத்தை திறக்க கோரிக்கை..!
X
விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கலில் பேருந்து நிலையத்தை இயக்க நடவடிக்கை தேசிய லீக் சார்பாக மேயரிடம் மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கலில் பேருந்து நிலையத்தை இயக்க நடவடிக்கை தேசிய லீக் சார்பாக மேயரிடம் மனு அளிக்கப்பட்டது.

சிவகாசி:

விருதுநகர், திருத்தங்கலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வரும் காரணத்தால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ள திருத்தங்கல் பஸ் நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் சிவகாசி 37-வது வார்டில், முஸ்லிம் தைக்கா தெருவில் உள்ள முஸ்லிம் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடத்தில் சுற்று வட்டார பகுதியில் சமுதாயக்கூடம் அமைத்து தரவும்,முஸ்லிம் நடுத்தெருவில் பாவடித்தோப்பு திடலின் நுழைவு பகுதியில் வளைவு நுழைவாயில் (ஆர்ச்) ஒன்று ஏற்படுத்தி தரும்படி உள்ள கோரிக்கை மனுவை இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பத்திடம் மனு அளித்தார்.

அப்போது , இந்திய தேசியலீக் நிர்வாகிகள் முகம்மது கான்,முகம்மது காசிம் இப்ராஹிம், முத்துலாஷா, ஷாஜகான் மாபுபாட்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!