காரியாபட்டி அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு

காரியாபட்டி அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு
X

காரியாபட்டி அருகே புதிய ரேசன் கடையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்து அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்.

காரியாபட்டி அருகே புதிய ரேஷன் கடையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஜோகில்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், ஜோயில்பட்டியில் ,புதிய ரேஷன் கடை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. ஒன்றியக்குழுத்தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார்.

புதிய ரேஷன் கடை கட்டிடத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில், காரியா பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கண்ணன், பேரூராட்சித் தலைவர் செந்தில்,மாவட்டக் கவுன்சிலர் தங்கத்தமிழ் வாணன், மாவட்ட கழக பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய கழக துணைச் செயலாளர் குருசாமி, ஜோகில் ஊராட்சி மன்றத்தலைவர் ராக்கம்மாள், கருப்பையா, யூனியன் ஆணையாளர் போத்தி ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு சில குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களையும் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட அளவிலான வருவாய்த்துறைஅதிகாரிகள் மற்றும் வட்ட வழங்கல்அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!