வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்
X

வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடந்தது.

மல்லாங்கிணறு பகுதியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடந்தது.

மல்லாங்கிணறில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சி அளவிலான, வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ் தலைமை வகித்தார் . கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ராஜேஷ், ஸ்பீச் நிறுவன திட்ட மேலாளர் சுரேந்தர், காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் குழு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

கூட்டத்தில், வட்டார அலுவலர் குழந்தைகள், பாதுகாப்பு குழு சார்பாக, கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம் முகாம் நடத்துவது என்றும், பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு சேர்ப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்