காரியாபட்டி சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி எடுத்த பெண்கள்

காரியாபட்டி சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி எடுத்த பெண்கள்
X

காரியாபட்டி கோயில் விழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

காரியாபட்டி சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்றனர்.

காரியாபட்டியில் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா 10 நாட்கள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி என்.ஜி.ஓ நகர் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா 10 நாட்களாக நடை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜைகள் நடந்தப் பட்டது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

காரியாபட்டி குண்டாற்றிலிருந்து சக்தி கரகம் உருவேற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலில் நிலை நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர். மேலும் நேர்த்தி கடனாக வளர்க்கப் பட்ட 300 க்கு மேற்பட்ட முளைப்பாரிகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆற்றங் கரையில் கரைக்கப் பட்டது. விழாவில் பட்டிமன்றம், கரகாட்டம், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. அதிகாலை பொங்கல் வைபவம் மற்றும்மாலை 5 மணிக்கு முளைப்பாரி கங்கையில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், பேரூராட்சித் தலைவர் செந்தில், மாவட்டக் கவுன்சிலர். தங்க தமிழ்வாணன், சப் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், கோவில், நிர்வாகிகள் சுந்தர்ராஜன் , காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!