ஊட்டி மலர் கண்காட்சியில் 1 லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிஸ்னிவேர்ல்டு

ஊட்டி மலர் கண்காட்சியில் 1 லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிஸ்னிவேர்ல்டு
X

ஊட்டி மலர் கண்காட்சியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலை ரயில்.

ஊட்டி மலர் கண்காட்சியில் 1 லட்சம் மலர்களால் டிஸ்னிவேர்ல்டு டிஸ்னிவேர்ல்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

1 லட்சம் மலர்களால் ஆன ‘டிஸ்னி வேர்ல்டு’, 33 அடி நீளத்தில் மலை ரயில்: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்கியது. கொய் மலர்களை கொண்டு டிஸ்னி வேர்ல்டு, மலை ரயில் மலர் அலங்காரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று 10ம் தேதி துவங்கி 10 நாட்கள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. ஊட்டி மலர் கண்காட்சியை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா துவக்கி வைத்து பார்வையிட்டார்.

ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 20 அடி உயரத்தில் டிஸ்னி வோர்ல்டு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல ஆயிரம் மலர்களை கொண்டு நீலகிரி மலை ரயில், காளான், ஆக்டோபஸ் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு உருவாக்கப்படவுள்ளது.

126வது பிளவர் ஷோ போன்ற மலர் அலங்காரம் பல ஆயிரம் மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!