தைவான் மீது போர் தொடுக்குமா சீனா?

தைவான் மீது போர்  தொடுக்குமா சீனா?
X

பிரிக்ஸ் மாநாட்டின்போது இந்திய பிரதமர் தலைமையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தை.


பிரிக்ஸ் மாநாடு நடந்து முடிந்த கையோடு தைவானை அதகளம் பண்ணக் கிளம்பி இருக்கிறார் போலிருக்கிறது ஜி ஜின்பிங்.

தைவானில் திடீரென உச்ச கட்ட பதட்டம் நிலவுகிறது என்கிறார்கள். ஒரு ஆறு மாதங்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு, அத்தியாவசிய பொருட்களை பரவலாக மூன்று மாதங்களுக்கு தாக்கு பிடிக்கும் அளவிற்கு சேமித்து வைக்கும் உத்தரவு என சிட்டாக பறந்து வேலை பார்த்து வருகிறார்கள்.

சீனாவிலும் ரப்பர் படகுகளில் சென்று தைவானில் தரை இறங்க அகதிகள் தயாராக உள்ளனர். அப்படித் தான் சொல்லச்சொல்லி இருக்கிறார்கள் அவர்களிடத்தில். முதலில் தைவானின் கண்காணிப்பில் உள்ள ஆளில்லா தீவுகளில் இறங்கி சோதனை செய்து பார்ப்பது. பிறகு தைவானின் தலையெழுத்தை சோதிப்பது என திட்டமிட்டு வேலை பார்த்து வருகிறார்கள்.

ஏன்..இப்படி ஒரு படையெடுப்பு பெய்ஜிங்கிற்கு.?

எல்லாம் காரணமாகத்தான் என விஷயம் அறிந்த வட்டாரங்களில்பேசப்படுகிறது.

இப்போது சீனாவிற்கு தலை போகிற சமாச்சாரம் என்றால் எது? அதற்கு முன்னதாக வேறு சில விஷயங்களை பார்த்து விட்டு வந்து விடுவோம்., அப்போது தான் மேற்படியாரின் திருவிளையாடல் புரியும்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த சமயத்தில் இந்தியா, சீனா இடையேயான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட பல மணி நேரம் நடந்தது. இது சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் நேரடி சந்திப்பு மற்றும் பேச்சு வார்த்தை. இதற்கு முன்னர் நம் தமிழகத்தில் உள்ள மகாபலிபுரத்தில் வைத்து தான் பேசிக் கொண்டனர்.

அப்போது இருந்த நிலைக்கும் தற்போது நடைபெற்று முடிந்த பேச்சு வார்த்தைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. அப்போது நம்மிடம் பேசுவதற்கு முன்பு சீனா தன் படைகளை டெப்சாங் மலைப்பகுதியில் தங்க வைத்து விட்டு இல்லாத ஆட்டம் எல்லாம் ஆடிக் காட்டினர். இப்போது அப்படி அல்ல வாலை சுருட்டி கக்கத்தில் வைத்து கொண்டு அமர்ந்திருந்தார்.

பேச்சு வார்த்தையின் முடிவில் இரு தரப்பிலும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இடத்திற்கு திரும்ப ஒப்புக் கொண்டனர். இந்திய துருப்புக்கள் பின் வாங்கி தன் நிலைகளுக்கும் திரும்பி விட்டனர் சீன துருப்புகளும் தன் நிலைக்கு திரும்பி விட்டன.

இது யாருக்கு லாபம்....???

இப்படி ஒரு கேள்வி வந்தால்.., இது நாள் வரையில் சீனா செய்த செலவு பெருத்த நஷ்டம் என்பதாக புரிந்து கொள்ள வேண்டும். ஓர் யுத்தம் என்று வந்தால் அவர்களால் எவ்வளவு தூரம் தாக்கு பிடிக்க முடியும் என்பதை அனுபவ பாடமாக கற்றுக் கொண்டு இருப்பார்கள். இந்தியாவிற்கு இது பழகிக் போன ஒன்று. ஆதலால் பாதகமில்லை.

ஆச்சா....

இப்போது மீண்டும் கதைக்குள் போவோம். பிரிக்ஸ் முடிந்த கையோடு ஏன் இத்தனை அவசரம்....தைவானை முற்றுகை போட.?

ஆம் சரியாகச் சொல்வதென்றால் முற்றுகை மாத்திரமே இம்முறை... தைவான் மீது போர் தொடுக்கவல்ல என்கிறார்கள் உலக அரசியல் நிபுணர்கள். எதற்காக இந்த பூச்சாண்டி? சீனாவில் நிலவரம் சரியில்லை. பல கட்ட போராட்டங்கள் முன்னெடுக்க அங்கு ஒத்திகை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் சீன மக்கள்.

பொருளாதார மந்த நிலை மற்றும் தேக்கம் அவர்களின் அன்றாட வாழ்வியலை புரட்டிப் போட்டு இருக்கிறது. நகர்ப்புற வேலை வாய்ப்புகள் பெருமளவு சரிந்து பல நகரங்கள் காலியாகி கொண்டே வருகிறது. இதனால் நகர்ப்புற கட்டுமானங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகள் பலவும் காலியாகி அநாதையாக நிற்கிறது. இதில் முதலீடு செய்தவர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள்.

கம்யுனிஸ்ட்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை. பெரு வணிக நிறுவனங்களை அதகளம் பண்ணிக் கொண்டே வருகிறார்கள். ஆனானப்பட்ட அலிபாபா நிறுவனங்கள் கூட மிஞ்சவில்லை இவர்களிடமிருந்து. பல நிறுவனங்கள் ஊரை காலி செய்து விட்டு நகர்ந்து இருக்கிறார்கள்.

இத்தனை களேபரங்களை மடை மாற்ற ஓர் வடிகால்... அதற்கான திட்டமிடல் தேவை. அதற்கு தான் இந்த தைவான் முற்றுகை. இப்படி போக்கு காட்டுவது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இன்னும் சொல்லப்போனால் இது மா சே துங் காலத்து பழைய டென்னிக்.

இப்படி தான் 1960களில் அங்கு நிலவிய உணவு பஞ்சம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை இந்தியா மீது போர் தொடுத்து தீர்வு கண்டனர். அப்போது ஏற்பட்ட உணவு பஞ்சதிற்கு குருவிகள் கூட பலியாயின. அவைகள் தானிய உற்பத்திக்கு பெரும் தடையாக இருப்பதாக சொல்லி அவற்றை வேட்டையாட சொன்னார் அந்த புண்ணியவான். எதனையும் விட்டு வைக்காமல் திங்கும் பழக்கம் அவர் ஆரம்பித்து வைத்தது தான் என்கிறார்கள்.

எல்லாம் சரி....

ஒரு வேளை நிஜமாகவே தைவானை ஆக்ரமித்து விட்டால்...... அப்படி எல்லை மீற விடாது, இந்தியா என்பதை நம் இந்தியர்களை காட்டிலும் பெய்ஜிங்கிற்கு மிக நன்றாகவே தெரியும். அப்படி புரியும் படி பாடம் நடத்தியிருக்கிறார்கள் நம்மவர்கள். சொல்லிக் கொடுப்தில் கில்லாடிகள் ஆயிற்றே.விட்டு விடுவார்களா..?

இதுவும் ஓர் வகை பாடம் தான்.

தைவானை தட்டினால் இம்முறை யார் முதலில் வருகிறார்கள் என்பதை காண்பிக்க இருக்கிறார்கள். அமெரிக்காவா அல்லது இந்தியர்களா என்பதை ஓர் செயல் முறை விளக்கம் தர ஆயத்தமாகி வருகிறார்கள். இதன் மூலம் இந்திய பெருங்கடல் மட்டுமல்ல இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் நம்மவர்கள் ஜம்பமே செல்லும் என காண்பிக்க இருக்கிறார்கள்.

இதனால் உலக அளவில் அமெரிக்க கடற்படையின் தேவை இந்த பிரதேசத்திற்கே தேவையில்லை என சொல்லாமல் சொல்ல நினைக்கிறார்கள். இவற்றை எல்லாம் நன்றாக உணர்ந்துள்ள படியால் எல்லை மீறும் வாய்ப்பே பெய்ஜிங்கிற்கு இல்லை என அடித்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் வேறு.

தைவானில் திடீரென இறங்கி தாக்கினால்... திபெத்திய பீடபூமியை பெய்ஜிங் மறந்து விட வேண்டி வரும். ஏதோ திபெத்திய பக்கம் தான் என்று இல்லை...... இதனூடாக ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக குவாடர் துறைமுகம் வரை ஸுவாகா தான். இது தான் பழைய பாரதம். பழைய பாரதத்தில் இவையெல்லாம் இருந்தன. பாரதம் என மோடி பெயர் மாற்றியதும், ஜி ஜின்பிங் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே மேலும், கீழும் குதித்தார்.

எனவே, தைவானை சீனா தாக்கினால், நம்மவர்கள் நோகாமல் நோண்டி எடுத்து விடுவார்கள் என்று நம்மைக் காட்டிலும் அவர்களுக்கு அது நன்றாக தெரிந்திருக்கிறது. இல்லை என்றால் சீன அதிபரை நேர் எதிரே வைத்துக் கொண்டே பிரதமர் மோடி பாரத் என்ற பெயரை பலமுறை உச்சரித்தார். அதுவும் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல், ஒரு ஆளுமை நிறைந்த துடுக்குத்தனத்துடன் ஆணித்தரமாக பேசியிருப்பாரா பிரிக்ஸ் மாநாட்டில்?

போதாக்குறைக்கு பிரிக்ஸ் பிளஸ்ஸில் யார் இருக்கலாம்? யார் கூடாது என்பது வரை இந்தியாவின் கையே ஓங்கி நிற்கிறது. துருக்கியை கிட்ட சேர்க்கவில்லை. பாகிஸ்தான் மீதான பொருளாதார தடை என பார்த்து பார்த்து பந்தாடி வெற்றி கண்டு வருகிறார்கள்.

சரி தைவானை காக்க அமெரிக்கா ஓடி வந்து நின்றால்... செலவு கட்டுப்படியாகாது அதற்கு இம்முறை. தவிர அங்கு தேர்தல் தேதி நெருங்கி கொண்டிருக்கிறது. எல்லா பக்கங்களிலும் ஆயுத உதவி என ஓடிக் கொண்டிருக்க முடியாது.விளாடிமிர் புடின் சொல்லி சொல்லி அடிக்கக் காத்துக் கொண்டு இருக்கிறார். டீ-டாலரைஷேசன் செய்யாமல் ஓய மாட்டோம் என்று உறுமிக் கொண்டு நிற்கிறார்.

அனைத்து பக்கங்களில் இருந்து அமெரிக்காவை பழி தீர்க்க ஆளாளுக்கு கிளம்பி இருக்கிறார்கள். வரலாற்றில் முதல் முறையாக விழி பிதுங்கி நிற்கிறது மேற்குலகம். ஏற்கனவே பிரிக்ஸ்... பிரிக்ஸ் பிளஸாக மாறி நிற்க.... மற்ற உலக நாடுகளும் அதில் இணைய வரிசை கட்டி நிற்க..

தங்கள் உளவாளிகளை விட்டு ஊர் நாட்டாமை பார்த்து வந்த அமெரிக்கா இன்று வாய் மூடி மௌனியாக நிற்கிறது. நம்மவர்கள் அப்படி அதனை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அத்தனை எளிதில் திருந்தி விடுவார்களா என்ன.....

ஒன்று நிச்சயம். கண்டிக்கவும் தண்டிக்கவும் சிறியது பெரியது என பேதம் பாராமல் களத்தில் அசராது நிற்பது இந்தியர்களுக்கு மட்டுமே உரித்தானது. உலக வரலாற்றில் இதுவே முதல் முறையும் கூட.

வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்.

Tags

Next Story