தினமும் 4 சின்ன வெங்காயம் ! பச்சையாக சாப்பிட்டால் உடம்பில் நடக்கும் அதிசயங்கள் ! சாப்பிட்டு பார்க்கலாமா....?

தினமும் 4 சின்ன வெங்காயம் ! பச்சையாக சாப்பிட்டால்    உடம்பில் நடக்கும் அதிசயங்கள் ! சாப்பிட்டு  பார்க்கலாமா....?
X
சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டாலும் நன்மைகள் இருக்கும் . ஆனால் அதைவிட பச்சையாக சாப்பிட்டால் பல மடங்கு பயன்கள் இருக்கும். அதனால் தினமும் 4 அல்லது 5 சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் உடலில் நிறைய ஆரோகியமான மாற்றங்களை காண முடியும்.சின்ன வெங்காயம் எப்படி நம் உடலுக்கும் , முடிக்கும் நன்மைகள் அளிக்கிறது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம் .
சின்ன வெங்காயம் நிறைய ஆரோக்கிய நன்மைகளும் , மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் உள்ளது . இந்த சின்ன வெங்காயத்தை நாம் தலை முடிக்கும் பயன்படுத்தலாம் . இதை பயன்படுத்துவதன் முடிக்கு நல்ல வளர்ச்சியை கொடுத்து உறுதியாக வைக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் நம்மை நோய்கள் மற்றும் உடல் சிக்கல்களை தவிர்க்க உதவுகின்றன.

சின்ன வெங்காயத்தை சாம்பார் வெங்காயம் என்றும் அழைப்பார்கள். இந்த வெங்காயத்தை சமையலில் சேர்ப்பது அந்த உணவின் சுவையை பல மடங்கு அதிகரிக்கும். ஆனாலும் சின்ன வெங்காயத்தை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அந்த நன்மைகள் என்னென்ன என்று இந்த பகுதியில் முழுமையாக பார்க்கலாம் .

சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டாலும் நன்மைகள் இருக்கும் . ஆனால் அதைவிட பச்சையாக சாப்பிட்டால் பல மடங்கு பயன்கள் இருக்கும். அதனால் தினமும் 4 அல்லது 5 சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் உடலில் நிறைய ஆரோகியமான மாற்றங்களை காண முடியும்.


சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சின்ன வெங்காயத்தில் ஆன்டி -ஆக்சிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன . இதில் உள்ள இரும்புச் சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இது இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தம் உண்டாவதைத் தடுக்கிறது. இதனால் செல்களில் ஏற்படும் பாதிப்பை தடுத்து புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும். மேலும் இதை பச்சையாக சாப்பிடுவதால் கண்களுக்கும் தெளிவான பார்வையைக் கொடுக்கும் .

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காயம்

சின்ன வெங்காயத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளன . இதன் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன, சளி, இருமல் போன்றவற்றை தடுக்கின்றன.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர், தியோசல்பேட்டுகள் மற்றும் சல்பைடுகள் உள்ளிட்ட ஆற்றல் வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது.சின்ன வெங்காயத்தில் க்வெர்சிட்டின் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடன்ட் இருக்கிறது. இது உடலில் ஏற்படும் அழற்சிகளைத் தடுக்கிறது. மேலும் ஆஸ்துமா போன்ற அழற்சியால் ஏற்படும் நோய்களுக்கு இது மிகப் பெரிய நன்மையை தருகிறது.

நீரிழிவை கட்டுப்படுத்தும் சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தில் உள்ள காம்பவுண்டுகள் இரத்தத்தில் இன்சுலின் அளவை சீராக்க உதவுகின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படுகிறது. தினமும் 4 சின்ன வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டு வரும்போது அதிலுள்ள சல்ஃபர் உள்ளிட்ட சேர்மங்கள் கணையத்தின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வதோடு இன்சுலின் அளவையும் மேம்படுத்தும்.

குறிப்பாக இன்சுலின் ரெசிஸ்டண்ட் உள்ளவர்கள் தினமும் சிறிது சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வர ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தில் உள்ள இரும்புச் சத்து மற்றும் அன்டி-ஆக்சிடன்ட்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இது இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். சின்ன வெங்காயத்தில் உள்ள தாதுக்களுக்கு ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலைக் குறைக்கும்.இதனால் இதயத் தமனிகளில் பிளாக் உருவாவதைத் தடுக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியம் பலமடங்கு அதிகரிக்கும்.


சருமம், தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு குணங்கள் சருமத்தில் ஏற்படும் சிறிய புண்கள், வெடிப்பு போன்றவற்றைத் தீர்க்க உதவுகிறது. இது சருமத்தில் அழற்சியால் ஏற்படும் பாதிப்புகளை விரைவாக சரிசெய்கிறது.வெங்காயத்தில் உள்ள வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள மற்றும் சல்ஃபர் உள்ளிட்டவை கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும் தன்மை கொண்டவை. இந்த கொலாஜன் தான் சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும்.

செரிமான ஆற்றலை மேம்படுத்தும் சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக வைத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள இன்யூலின் என்னும் ப்ரோ பயோடிக் பண்புகள் குடலின் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்து குடலில் நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால் மலச்சிக்கல் உள்ளிட்ட அஜீரணம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தவிர்க்க முடியும்.

சுவாச மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை பச்சையாக தினமும் சாப்பிட்டு வரும்போது மூக்கடைப்பு, சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைக்கவும் சரிசெய்யவும் முடியும்.சின்ன வெங்காயத்தில் காணப்படும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு தன்மைகள் நம் சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

எலும்புகள் வலுவடைய சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தில் கல்சியம் சத்து நல்ல அளவில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் முக்கியத் தாதுவாக இருப்பதால், இதனைச் சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலுவாகவும் திடமாகவும் இருக்கும். இது எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது.

சின்ன வெங்காயம் அதிகமாக சாப்பிடுவதால் ஏதேனும் பக்க விளைவுகள் வருமா?

சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் மட்டும் பக்க விளைவுகள் வருவதில்லை. ஆனால் அளவக்கு அதிகமாக பச்சையாக சாப்பிடும்போது ஏற்கனவே சில உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு கீழ்வரும் சில பக்க விளைவுகள் உண்டாகக் கூடும்.

1. வயிறு அசௌகரியம் உண்டாகும்.

2. நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியை ஏற்படுத்தலாம்.

3. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றம் உண்டாகும்.

4. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

யாரெல்லாம் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்?

1. இரைப்பை கோளாறு உள்ளவர்கள்,

2. மலக்குடல் அழற்சி நோய் உள்ளவர்கள்,

3.ரத்தத்தை மெலிதாக்குத் பிளட் தின்னிங் மருந்துகள் எடுப்பவர்கள்,

ஆகியோர் வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவதைக் குறைக்கவோ தவிர்க்கவோ செய்வது நல்லது.

Tags

Next Story
உலகத்திலேயே அதிகமாக  இந்தியர்களுக்கு இதனால்தான் சுகர் வருதாம் ...! கவனமா படிங்க ...!