திடீரென கவிழ்ந்த படகு: நூலிழையில் உயிர் தப்பிய அமைச்சர்

திடீரென கவிழ்ந்த படகு: நூலிழையில் உயிர் தப்பிய அமைச்சர்
X

பைல் படம்.

திடீரென கவிந்த படகில் பயணம் செய்த தெலங்கானா அமைச்சர் நூலிலையில் தப்பித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருப்பவர் காங்குலா கமலாகர். தெலங்கானா மாநிலம் உருவாகி பத்து ஆண்டுகள் கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

இந்த நிலையில் நேற்று தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள ஆசிஃப் நகருக்கு அமைச்சர் காங்குலா கமலாகர் படகில் பயணம் செய்துள்ளார். அப்போது படகு திடீரென கவிழ்ந்துள்ளது. அருகில் இருந்த அதிகாரிகள், காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் அமைச்சரை லாவகமாக காப்பாற்றினர். படகு கவிழ்ந்த நிலையில் அமைச்சர் நிலை தடுமாறிய நிலையில் நூலிலையில் தப்பிய சம்பவம் கரீம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!