தமிழ் கடி ஜோக்ஸ் , மொக்க ஜோக்ஸ்
Jokes tamil Memes
Jokes tamil Memes
"நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?
"நாய்கிட்டதான் கேக்கணும் "
"அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"
--
"எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?"
"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"
--
"நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"
"ஏன் கேக்கறே"
"திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"
--
ப்ரண்ட் 1 : ஒரு மாடு ஒரு நாள் கடைக்கு போச்சான் டக்குனு அங்க இருந்த கதவ கடிச்சு சாப்பிட ஆரமிச்சுடுச்சான் ஏன் ?
ப்ரண்ட் 2 : ஏன் ?
ப்ரண்ட் 1 : ஏனா அந்த கதவுல Pull-(புல்) னு போட்ருந்துச்சான்
--
ஒருத்தன் அவன் போன் ல இருந்து ஒரு நம்பருக்கு கால் பண்ணானாம் கால் போகவே இல்லயாம்
ஏன் ?
ஒரு நம்பருக்கு கால் பண்ணா எப்படி 10 நம்பருக்கு கால் பண்ணாதான போகும்…
--
அம்மா : டேய் ஏன்டா வேர்க்க வேர்க்க சாப்டுட்டு இருக்க அந்த Fan ah போட வேண்டிதான
மகன் : இல்லமா அப்பாதான் வேர்வை சிந்தி சாப்பிட சொன்னாரு
--
என்ன டாக்டர்! என்னை அறுவை சிகிச்சை பண்ணுவீங்கன்னு பார்த்தா கடி ஜோக்கா சொல்லிட்டிருக்கீங்க.
இதுதான் 'அறுவை; சிகிச்சை!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu