ஈரோடு : தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணி வகுப்பு
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (துணை ராணுவத்தினர்) வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகள் விவரம்
மொத்த வாக்குச் சாவடிகள் - 237
பதற்றமான வாக்குச் சாவடிகள் - 9
வாக்களிக்கும் இடங்கள் - 53
போலீசார் குழுக்கள் வருகை
பாதுகாப்பு பணிக்காக கோவையை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனைச் சேர்ந்த 160 போலீசார் கடந்த 15-ம் தேதி ஈரோடு வந்தனர்.
துணை ராணுவ வீரர்கள் வருகை
மத்திய தொழில்பாதுகாப்பு படையைச் சேர்ந்த 92 துணை ராணுவ வீரர்கள் கேரள மாநிலம், கொச்சியில் இருந்து நேற்று அதிகாலை ரயில் மூலமாக ஈரோடு வந்தனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் எவ்வித பயமுமின்றி பாதுகாப்பாக வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தும் விதமாக தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கொடி அணிவகுப்பு நடத்துவது வழக்கம்.
பாதுகாப்பு குழுக்களின் அணிவகுப்பு
இன்று காலை ஈரோட்டில், மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் 40 பேர், உள்ளூர் போலீசார் 120 பேர் என மொத்தம் 160 போலீசார், ஈரோடு டவுன் டி.எஸ்.பி. முத்துக்குமரன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu