சிரிக்க, சிந்திக்க தமிழில் கடி ஜோக்ஸ்..
Sema Kadi Jokes in Tamil
Sema Kadi Jokes in Tamil
ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க.
உங்களுக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு, எதுக்கும் மூன்று மாதங்கள் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார்.
மூன்று மாதங்கள் கழித்து மூன்று பெரிய கேண்களை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.
டாக்டர்: என்ன இவை?
சர்தார்: நீங்கதானே மூன்று மாதங்கள் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க
டாக்டர்: ???
தேன் கொட்டினா வலிக்கும் ... பாம்பு கொட்டினா வலிக்கும்... முடி கொட்டினா வலிக்குமா?
**
ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்... பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?
**
பொங்கலுக்கு கவர்மெண்ட்டுல லீவு கொடுப்பாங்க... ஆனா இட்லி, தோசைக்கு கொடுப்பாங்களா?
**
திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும், அவரால் ஒரு குரலில்தான் பேச முடியும்.
**
என்னதான் உன் தலை சுத்தினாலும், உன் முதுகை நீ பார்க்க முடியுமா?
**
மீன் பிடிக்கிறவனை மீனவன் என்று சொல்லலாம்... நாய் பிடிக்கறவனை நாய்னு சொல்ல முடியுமா?
**
என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போடா முடியாது.
**
தூங்குவதற்கு முன்னாடி ஏன் குட்நைட் சொல்றோம்??
**தூங்குனதுக்கு அப்பறம் சொல்லமுடியாது அதனால
**
ஒரு ரூம்ல ஒரு கார்னர்ல ஒரு பூனை இருக்கு.
வலது மூலைல ஒரு எலி.
இடது மூலைல ஒரு கப் பால்.
பூனையின் கண்ணு எதில் இருக்கும் ?
பூனையின் கண்ணு அதோட முகத்தில்தான் இருக்கும்!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu