திமுக-வை சீண்டிய விஜய் அதிமுக-வை தொடாதது ஏன்? என்னமோ இருக்கு..!?

திமுக-வை சீண்டிய விஜய் அதிமுக-வை தொடாதது ஏன்? என்னமோ இருக்கு..!?
X

தாவெக தலைவர் விஜய் 

அ.தி.மு.க.,விற்கு ஆதரவான வாக்குகுளை தன் பக்கம் இழுக்கவே விஜய் அக்கட்சியை விமர்சிக்காமல் தவிர்த்துள்ளார்.

விக்கிரவாண்டியில் கடந்த 27-ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. அப்போது பேசிய கட்சியின் தலைவர் விஜய்,சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் தான் நான் எதிர்க்கப் போகிறேன். ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப் பூசி, ஃபாசிசம் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள்.

அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?. இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி" என தி.மு.க., விற்கு எதிராக கொதித்தார். பா.ஜ.க.,வையும் விமர்சித்தார்.

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்" என பேசினார்.

இதையடுத்து திமுக-வை சீண்டிய விஜய் அதிமுக-வை மட்டும் தொடாதது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. விஜய் பேசியது எதிர்பார்த்த ஒன்றுதான். அவர் பேசியது அனைத்துமே திராவிடம் சார்ந்த கொள்கைகள்தான். சமூகநீதி, மதச்சார்பின்மை, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவை திராவிடக் கட்சிகளின் டெம்ப்ளேட்தான்.

மாநாட்டில் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். இந்த நிலைப்பாடு எதிர்பார்த்த ஒன்றுதான். கரப்ஷன் கபடதாரிகள் என பேசியது அதிமுக-வையும் சேர்த்து தான். அதேநேரத்தில் அதிமுக வலிமையான கட்சியாக இல்லை. ஆக்டிவாகவும் அவர்கள் இல்லை. எனவேதான் அதிமுக குறித்து பெரிதாக பேசவில்லை. மேலும் திமுக எதிர்ப்பை கையில் எடுத்திருக்கிறார். அதிமுக-வுக்கு செல்லும் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்பதாலும் அவர்கள் குறித்து அதிகம் பேசாமல் இருந்திருக்கலாம்.


அதேநேரத்தில் திமுகவை தாக்கிய அளவுக்கு பாஜகவை தாக்கவில்லை. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடிகள் ஏற்படும் என பயப்படுகிறாரா என தெரியவில்லை. 2026-ம் ஆண்டு தேர்தலில் த.வெ.க-வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம் என சொன்னது தான் மிக முக்கியமான விஷயம்.

இதை திமுக, அதிமுக சொன்னதில்லை. இதனால் திமுக கூட்டணிக்குள் நெருக்கடி ஏற்படும். ஏற்கெனவே இந்த கோரிக்கையை விசிக பேசி வருகிறது. தற்போது விஜய்யின் கருத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் ஆதரித்து இருக்கிறார். அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் கம்யூனிஸ்ட் கட்சிகள் வேண்டாம் என சொல்ல மாட்டார்கள். எடப்பாடியால் திமுக கூட்டணியை உடைக்க முடியவில்லை.

`விஜய் சரியாக அம்பு எய்திருக்கிறார்’. ஆனால் விஜய் சரியாக அம்பு எய்திருக்கிறார். திமுக எதிர்ப்பை இன்னும் தீவிரப்படுத்துகிறாரா, பாஜக எதிர்ப்பில் இருக்கும் குழப்பத்தை சரி செய்கிறாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கட்சியை எப்படி அடிமட்டத்தில் வலுப்படுத்துகிறார். அடிமட்ட தொண்டர்களிடத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதையெல்லாம் பொறுத்து தான் கட்சி வளரும்.

முதலில் தன்னுடைய பலத்தை தெரிந்து கொள்ள விரும்புவார். எனவே அவரது தலைமையில்தான் கூட்டணி இருக்க வேண்டும் என நினைப்பார். விஜய்யின் செல்வாக்கு அறியாமல் பிற கட்சிகள் தலைமையை ஏற்றுக்கொள்வார்களா என தெரியவில்லை. திமுகவை தோற்கடிக்க வேண்டும். அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என நினைப்பர்வர்கள் இணையலாம். அதிமுக கூட விஜய் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சீமானுக்கு கிடைக்கும் வாக்குகளில் பாதி விஜய்க்கு சென்றுவிடும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்தும் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இது இப்படி இருக்க இன்னொரு குரூப் விஜய், அதிமுகவை தனக்கு போட்டியாக நினைக்கவே இல்லை. அந்த அளவுக்கு அதிமுக வலுவான கட்சி கிடையாது. கூட்டணிக்கு வந்தால் வச்சுக்குவோம் என்று விஜய் கருதுவதாகவும் கூறுகிறார்கள். எது எப்படியோ அடுத்த தேர்தல் தமிழகத்துக்கு ஒரு மாஸ் தேர்தல்தான் போங்கோ..!!

Tags

Next Story
Similar Posts
தென்காசி பஸ் நிலையம் அருகில் உள்ள மதுபான கடையை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு
திமுக-வை சீண்டிய விஜய் அதிமுக-வை தொடாதது ஏன்? என்னமோ இருக்கு..!?
விஜய்-ன் வீர வசனங்கள் :  பா.ஜ.க., கடும் கண்டனம்..!
தமிழக அரசியல் களத்தில்  விஜய் வீசிய அணுகுண்டு..!
ஆட்சியாளர்கள் கரை  வேட்டி கட்டலாமா? மக்களே சொல்லுங்க..!
அந்தியூர் பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திருப்பூர் எம்பி
அமித்ஷாவுடன் உமர் சந்திப்பு: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியுடன் மோதும் முன்னாள் கவுன்சிலர்
ஜேபிசி கூட்டத்தில் கண்ணாடி பாட்டிலை உடைத்த திரிணாமுல் எம்பி சஸ்பெண்ட்
திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: இரா. முத்தரசன் பேட்டி
பிரமாண்ட மாநாட்டுக்கு  தயாராகும் தமிழக பா.ஜ.க...!
வரலாற்றுச் சின்னம் நாமக்கல்  கோட்டை பற்றி தெரியுமா?
அப்துல்கலாம் இப்படிப்பட்டவரா? பலரும் அறியாத உண்மைகள்!