கண் திருஷ்டி, கெட்ட சக்தி பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இந்த சிவமந்திரம் போதுமே...

கண் திருஷ்டி, கெட்ட சக்தி பாதிப்புகளில் இருந்து தப்பிக்க  இந்த சிவமந்திரம் போதுமே...
X

சிவமந்திரம் சொன்னால் கெட்ட சக்தி விலகி ஓடும்!

கண் திருஷ்டி, கெட்ட சக்தியில் இருந்து தப்பிக்க சிவமந்திரம் சொன்னால் மட்டும் போதும். வீணாக பணத்தை செலவு செய்யாதீர்கள்.

தினமும் இந்த சிவமந்திரத்தை உச்சரிப்பவர்களின் உடம்புக்குள் கண் திருஷ்டியும் நுழையாது, தீய சக்தியும் நுழையாது. நல்ல நேரம் நடக்கக்கூடிய சமயத்தில் கூட சிலருக்கு கஷ்டம் வரும். அதற்கு காரணம், கண்ணுக்குத் தெரியாமல் நம்மை சுற்றி இருக்கும் கண் திருஷ்டியும், கெட்டசக்தியும் தான். இந்த இரண்டு பிரச்சனைகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள, நமக்கு நாமே ஒரு பாதுகாப்பு வளையத்தை போட்டுக் கொள்ள வேண்டும். அது எப்படி. மந்திர கட்டு, மாந்திரீகம், தாந்த்ரீகம் என்று போக வேண்டாம்.

சிவபெருமானை நினைத்து இந்த மந்திரத்தை தினம் தோறும் உங்கள் வாயால் உச்சரித்து வந்தாலே போதும். அந்த மந்திரம் உங்கள் உடம்பைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு வளையமாக வந்து விடும். எதிரி தொல்லை, கண் திருஷ்டி, தீய சக்தி, எதிர்மறை ஆற்றல் இவைகளில் இருந்து உங்களை பாதுகாக்க போகும் அந்த மந்திரம் என்ன?

சிவ மந்திரம்:

ஓம் வயநமசி ஸ்ரீயும்

அரிஓம் ஐயும் சுவாகா...

இது தீய சக்திகள் அனைத்தையும் தன்னிடம் விட்டு விரட்டுவதாகும். சரி, மந்திரம் தெரிந்து விட்டது. இந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும். எத்தனை முறை உச்சரிக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்து குளித்து விட்டு, பூஜை அறையில் முடிந்தால் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஈசனை மனதார பிரார்த்தனை செய்து, குலதெய்வத்தை நினைத்து, பிறகு இந்த மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லலாம்.

விளக்கு ஏற்ற முடியாது என்பவர்கள் பூஜை அறையில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு உங்களுடைய அன்றாட வேலையை துவங்கலாம். மற்றபடி இந்த மந்திரத்தை உச்சரிக்க பெரிசாக பூஜை புனஸ்காரங்கள் என்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் செய்ய தேவை கிடையாது. சில பேருக்கு வாழ்க்கையில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று யூகிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். கூடவே இருக்கும் நண்பன் எதிரியாக செயல்படுவான். பின்னால் இருந்து குழி தோண்டுவான். இதனால் வாழ்க்கையில் முன்னேற முடியாத சூழ்நிலை ஒரு மனிதனுக்கு இருக்கும். இப்படிப்பட்ட எதிரி தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றாலும் இந்த மந்திரத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

10 பேர் கூடி இருக்கும் இடத்தில் உங்களுக்கே தெரியாமல் குழப்பம் வரும். அந்த சமயத்தில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் குழப்பம் தெளிவாகும். அலுவலகம் தொழில் செய்யும் இடம் உங்களுடைய கடை எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரித்து பலன் பெறலாம்.

மிகப்பெரிய ரகசியங்களை கூட சித்தர்கள் மந்திரம் என்ற பெயரில் இரண்டு வரியில் நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அதை நாம் பிரயோகப்படுத்துவதில் தான் நன்மையை அடங்கி இருக்கிறது. அதில் ஒரு அற்புத சக்தி வாய்ந்த மந்திரம் தான் இது. தொடர்ந்து 48 நாட்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக குறைவதை உணருவீர்கள்.

வரக்கூடிய பிரதோஷம் நாளில் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலில், இந்த இந்த மந்திரத்தை சொல்லிப் பாருங்கள். 48 நாள் தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்தால், உங்களுக்கு என்ன பலன் கிடைக்குமோ, அது ஒரே நாளில் கிடைத்து விடும். இந்த மந்திரமும் இந்த பதிவும் உங்களுக்காக சிவபெருமான் கொடுத்த பிரசாதம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். பல நாட்களாக பிரச்சனையில் சிக்கி இருக்கும் உங்கள் வாழ்க்கை, விடுதலை பெறவேண்டும்.

Next Story