ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : மக்களோடு மக்களாக நின்று வாக்கு செலுத்தினார் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால்
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி (அதாவது இன்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்பாளர்கள்
தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்பட எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்தன.
தேர்தல் பிரசாரம்
கடந்த 21-ந் தேதி முதல் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
வாக்காளர்கள் விபரம்
ஆண்கள் - 1,10,128
பெண்கள் - 1,17,381
3-ம் பாலினத்தவர்கள் - 37
மொத்தம் - 2,27,546
வாக்குச்சாவடிகள் விபரம்
இந்த தொகுதியில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஓட்டுப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஓட்டுப்பதிவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் வாக்கு செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் மக்களோடு மக்களாக நின்று ஜனநாயக கடமையாற்றினார்.இந்த தொகுதியில் மொத்தம் 9 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu